“நீதிபதின்னு பொய் சொல்லி பல கோடிக்கு அதிபதியாயிட்டியே..” -வழக்கில் சிக்கியவர்களிடம் ஆட்டைய போட்ட நபர்.

“நீதிபதின்னு பொய் சொல்லி பல கோடிக்கு அதிபதியாயிட்டியே..” -வழக்கில் சிக்கியவர்களிடம் ஆட்டைய போட்ட  நபர்.

கேரள மாநிலம் திரிசூர் மாவட்டத்தில் ஒரு நபர் பலரிடம் தன்னை உச்ச நீதிமன்ற நீதிபதி என்று பொய் சொல்லி கோடிக்கணக்கில் ஆட்டைய போட்ட அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது .

“நீதிபதின்னு பொய் சொல்லி பல கோடிக்கு அதிபதியாயிட்டியே..” -வழக்கில் சிக்கியவர்களிடம் ஆட்டைய போட்ட  நபர்.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் சிரக்கலில் ,புத்தியதேரு கவிதாலயம் வீட்டில் வசிக்கும் ஜிகிஷ் என்ற ஒரு 37 வயதான நபர் அங்குள்ள பலரிடம் இப்படி தன்னை நீதிபதி என்று பொய் சொல்லி பணம் கறந்த விஷயம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .அதன்படி கேரளா மாநிலம் பாலியக்காராவைச் சேர்ந்த ஒருவர் கடந்த மாதம்  கிரேன்  விபத்தில்  உயிரிழந்தார் .அதனால் அந்த கிரேன் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டு வழக்கு நடந்து வந்தது .அதனால் அந்த கிரேன் உரிமையாளர் மிகவும் மன வேதனையில் இருந்தார் .அப்போது இந்த ஜிகிஷ் அவரை தொடர்பு கொண்டு தன்னை ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி என்று கூறி அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் .அதன் பிறகு  அவர் தன்னிடம் 12.5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் அவரை அந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறினார் .அதை உண்மையென்று நம்பிய அவர் ஜிகிஷிடம் அவர் கேட்ட 12.5 லட்ச ரூபாயை கொடுத்தார் .

அதை பெற்றுக்கொண்ட அவர் அங்கிருந்து தலை மறைவானார் .பிறகு பாதிக்கப்பட்ட கிரேன் உரிமையாளர் போலீசில் புகார் கூறினார். போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்தார்கள் .

இந்த  விசாரணையில் அவர் மீது வாலப்பட்டணம், கோடனாட், தலிபரம்பா, மற்றும் பெரம்பவூர் ஆகிய இடங்களில் பலரிடம் பல கோடி மோசடி செய்ததால் அவர் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டறிந்தார்கள் .பிறகு போலீசார் அந்த ஜிகேஷை கைது செய்தார்கள் .

“நீதிபதின்னு பொய் சொல்லி பல கோடிக்கு அதிபதியாயிட்டியே..” -வழக்கில் சிக்கியவர்களிடம் ஆட்டைய போட்ட  நபர்.