தடாகம் பகுதியில் இரவில் உலா வந்த காட்டுயானை வனப்பகுதிகள் விரட்டியடிப்பு

 

தடாகம் பகுதியில் இரவில் உலா வந்த காட்டுயானை வனப்பகுதிகள் விரட்டியடிப்பு

கோவை

கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் இரவுநேரத்தில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர், பத்திரமாக வனப்பகுதிக்குள் அனுப்பிவைத்தனர். கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை, சுற்றித் திரிவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனால், யானை ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் காட்டுயானை ஒன்று சாலையில் நடந்துசென்றது.

தடாகம் பகுதியில் இரவில் உலா வந்த காட்டுயானை வனப்பகுதிகள் விரட்டியடிப்பு

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு சென்ற வனத்துறையினர் யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர். அப்போது யானை அந்த வழியாக நடந்துசெல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதேநேரத்தில் வனத்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி பொதுமக்கள் வானங்களில் சென்று வருவதும் பதிவாகி இருந்தது. இரவு நேரங்களில் மக்கள் வெளியில் நடமாடுவதால் அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்த வனத்துறையினர், எனவே அந்த பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.