கமல்ஹாசன் தோல்விக்கு ஜாதிதான் காரணம் – சாருஹாசன்

 

கமல்ஹாசன் தோல்விக்கு ஜாதிதான் காரணம் – சாருஹாசன்

நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்ய கூட்டணி தோல்வியடைந்ததால் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தேர்தலில் ஒரு கட்சி தோற்றுப் போனால் அக்கட்சியிலிருந்து வெற்றிபெற்றவர் கட்சிக்கு பலரும் அணிதாவுவதும் வழக்கம் தான். ஆனால் கட்சி தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து விவாதிப்பதும் மிக முக்கியம்..

கமல்ஹாசன் தோல்விக்கு ஜாதிதான் காரணம் – சாருஹாசன்

மக்கள் நீதி மய்ய தோல்வி குறித்து கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் அளித்துள்ள பேட்டியில், “தோல்வி அனைவருக்கும் சகஜம் தான். தற்போது அதுதான் கமல்ஹாசனுக்கும் ஏற்பட்டுள்ளது. சிலர் கமல்ஹாசனை தலைவராக திணிக்க முயல்கின்றனர். ஆனால் அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இது கமல்ஹாசனின் தவறல்ல, அவர் தலைவராக வரவேண்டுமென நினைத்தவர்களின் தவறு.

பிராமண சமூகத்திற்கு தமிழக அரசியலில் எதிர்காலம் இல்லை. அப்படியே தலைவராகவேண்டுமென நினைத்தால் ஒரு கலெக்டர் ஆகணும். அதை தாண்டு யோசிக்கக்கூடாது. இது திராவிட நாடு. கமல்ஹாசனின் தோல்விக்கு பாதி காரணம் சாதிதான். கமல்ஹாசன் தோல்வியடைந்தது எங்களுக்கும் வருத்தம் தான். ஆனால் வெற்றி, தோல்வி எல்லாம் சகஜம். பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது” எனக் கூறினார்.