செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் : விழிபிதுங்கும் திமுக!

 

செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் : விழிபிதுங்கும் திமுக!

திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் : விழிபிதுங்கும் திமுக!

முன்னாள் அதிமுக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தில் 2018 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். இவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி மோசடி செய்ததாக அம்பத்தூர் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் செந்தில்பாலாஜி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானது என்று கூறப்பட்டது. இதனால் செந்தில்பாலாஜி முன்கூட்டியே ஜாமீன் பெற்றார். இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது . இதை தொடர்ந்து மோசடி வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், செந்தில் பாலாஜி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் : விழிபிதுங்கும் திமுக!

இந்நிலையில் கரூர் திமுக வேட்பாளரும் , முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி உள்பட 47 பேர் மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். முதல் குற்றப் பத்திரிகையில் பெயர் இல்லாத நிலையில் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.2011 முதல் 15 இல் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி ரூபாய் 62 லட்சம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கலாகியுள்ளது.