விவசாயிகளிடம் விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது – அவசர சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு

 

விவசாயிகளிடம் விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது – அவசர சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு

விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்யும் போது எந்த வித கட்டணமும் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. மேலும், ஏற்கனவே அமலில் இருக்கும் விற்பனை(ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1987ல் திருத்தம் மேற்கொள்வதாகவும் அறிவித்துள்ளது. முதல்வர் பரிந்துரையின் படி ஆளுநர் இந்த 1987-ல் சீர்திருத்தங்களை கொண்டு வருதல் அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளார்.

விவசாயிகளிடம் விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது – அவசர சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், விவசாயிகள் தங்களின் வேளாண் பொருட்களை எந்த விற்பனை கூடங்களிலும், அங்கீகரிக்கபட்ட தனியார் சந்தை, கிடங்குகள், குளிப்பதன மையங்களில் விற்கலாம் என்றும் பண்ணையிலோ அல்லது உணவுப் பூங்கா வளாகங்களிலோ அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கோ நேரடியாக விற்பனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எந்த ஒரு சூழலிலும் விவசாயிகள் பொருட்களை விற்கும் போது அவர்களிடம் விற்பனை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் விற்பனை குழுக்களில் உள்ள தனி அலுவலர்களின் பதிவிக்காலம் 6 மாதம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.