பஞ்சாபில் முதன்முறை தலித் சமூகத்தை சேர்ந்தவர் முதல்வராக தேர்ந்தெடுப்பு!

 

பஞ்சாபில் முதன்முறை தலித் சமூகத்தை சேர்ந்தவர் முதல்வராக தேர்ந்தெடுப்பு!

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சர் சரன்ஜித் சிங் சன்னி இன்று காலை 11 மணிக்கு பதிவியேற்கிறார்.

பஞ்சாபில் முதன்முறை தலித் சமூகத்தை சேர்ந்தவர் முதல்வராக தேர்ந்தெடுப்பு!

காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் 2017ம் ஆண்டு அம்ரிந்தர் சிங் முதலமைச்சராக பதவியேற்றர். 4.5 ஆண்டுகள் ஆட்சி சுமுகமாக சென்ற நிலையில் உட்கட்சி பிரச்னை காரணமாக அம்ரிந்தர் சிங் தனது பதிவியை செய்தார்.

இந்நிலையில், புதிய முதலமைச்சர் பொறுப்புக்கு பலருடைய பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்ட நிலையில் இறுதியாக சரன்ஜித் சிங் சன்னி முதலமைச்சராக முடிவு செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலம் சாம்கூர் சாஹிப் சட்டமன்ற தொகுதியில் இருந்து 3 முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் பஞ்சாப் மாநிலத்தில் தலித் சமூதாயத்தை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக தேர்தெடுப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. நேற்றே பஞ்சாப் மாநில ஆளுநரை சந்தித்து பதவியேற்க முறைப்படி, கோரிக்கை விடுத்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு பொறுப்பேற்க ஆளுநர் அழைத்தார்.

அதன்படி சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் இன்று காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதலமைச்சர் சரன்ஜித் சிங் சன்னிக்கு பதிவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். பதைவியேற்பு விழாவில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து , காங்கிரஸ் மூத்த தலைவர் ஹாரிஸ் ராவத் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். பதவியேற்புக்கு பிறகு , அடுத்து வரும் நாட்களில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.