பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் அறிவிப்பு

 

பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் அறிவிப்பு

பஞ்சாப்பில் உட்கட்சி பூசல் காரணமாக முதல்வர் அமரீந்தர் சிங் பதவி விலகிய நிலையில், புதிய முதல்வராக சரண்ஜித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் அறிவிப்பு

கடந்த 2017 ஆண்டு மார்ச் 16ம் தேதி முதல் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து வந்த அம்ரிந்தர் சிங் மீது அதிருப்தி தெரிவித்து அண்மையில் 50 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்கள். இதனையடுத்து, நேற்று காலை பஞ்சாப் மாநில முதலமைச்சராக உள்ள அம்ரிந்தர் சிங்கை கலந்தாலோசிகாமல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கட்சியின் தலைமை கூட்டி அம்ரிந்தர் சிங்கை ராஜினாமா செய்ய காங்கிரஸ் தலைமை வலியுறுத்தியது. இதனையடுத்து அவர் நேற்று மாலை 4.50 மணி அளவில் சண்டிகரில் உள்ள பஞ்சாப் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக காங்கிரஸ் தலைமை இன்று மதியம் ஆலோசனை மேற்கொண்டது. கூட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக முதல்வராக சரண்ஜித் சிங் சன்னியை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதனை காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஸ் ராவத் டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.