தியானம் மூலம் மனித உடல் மாற்றங்கள் – ஆராய்ச்சியில் சத்குரு மருத்துவ ஆராய்ச்சி மையம்!

 

தியானம் மூலம் மனித உடல் மாற்றங்கள் – ஆராய்ச்சியில் சத்குரு மருத்துவ ஆராய்ச்சி மையம்!

அமெரிக்காவில் சத்குரு பெயரில் புதிதாக மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற ஹார்வெர்டு மருத்துவப் பள்ளியின் (Harvard Medical School) இணைப்பில் இயங்கும்,
பெத் இஸ்ரேல் மருத்துவ மையத்தில் (Beth Israel Deaconess Medical Center – BIDMC) இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தியானம் மூலம் மனித உடல் மாற்றங்கள் – ஆராய்ச்சியில் சத்குரு மருத்துவ ஆராய்ச்சி மையம்!

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் பெயரில், ‘Sadhguru Center for a Conscious Planet’ என்று தொடங்கப்பட்டுள்ள இந்த மையம், மனிதர்களின் விழிப்புணர்வு, அறிவாற்றல் மற்றும் கருணை ஆகிய 3 முக்கிய அம்சங்கள் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் எப்படி மேம்படுகிறது என்பதை ஆராய்ச்சி செய்ய உள்ளது. ஈஷா யோகா பயிற்சிகளை தொடர்ந்து செய்து வரும் தன்னார்வலர்களை கொண்டு பெத் இஸ்ரேல் மையம் சில ஆராய்ச்சிகளை ஏற்கெனவே செய்து வருகிறது. முக்கியமாக, தியானப் பயிற்சிகள் மூலம் உடலில் நடக்கும் மாற்றங்களை குறித்து அந்த மையம் ஆய்வு செய்து வருகிறது.

தியானம் மூலம் மனித உடல் மாற்றங்கள் – ஆராய்ச்சியில் சத்குரு மருத்துவ ஆராய்ச்சி மையம்!

இந்த மையத்தின் செயல்பாடுகள் குறித்து, அதன் இயக்குநர் டாக்டர்.பாலசுப்பிரமணியம் கூறுகையில், “இந்த மையத்தின் மூலம் மருத்துவம் மற்றும் சிந்தனை அறிவியலை ஒருங்கிணைத்து எங்களுடைய நோயாளிகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். சத்குருவின் பெயரில் இம்மையத்தை தொடங்குவதை பெருமையாக கருதுகிறோம் எனவும் தெரிவித்தார்.