வட்டி விகிதங்களில் மாற்றமா ? –ரிசர்வ் வங்கி அறிவிப்பில் என்ன உள்ளது ?

 

வட்டி விகிதங்களில் மாற்றமா ? –ரிசர்வ் வங்கி அறிவிப்பில் என்ன உள்ளது ?

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற நிலையில், வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என அறிவித்துள்ளது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ், ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை என அறிவித்தார்.

வட்டி விகிதங்களில் மாற்றமா ? –ரிசர்வ் வங்கி அறிவிப்பில் என்ன உள்ளது ?

கடந்த 3 நிதிக் கொள்ளக் கூட்டத்தின் போதும், வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக உள்ளது. அதுபோல ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் 3.35 சதவீதமாக நீடிக்கிறது. நிதிக்கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்படி, ஆன்லைன் பணப்பரிமாற்ற வசதிகளில் இனிமேல் வாரத்தின் அனைத்து நாட்களும், அனைத்து நேரத்திலும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதங்களில் மாற்றமா ? –ரிசர்வ் வங்கி அறிவிப்பில் என்ன உள்ளது ?

கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார நடவடிக்கைகள் மெல்ல சீரடைந்து வருவதாகவும், கிராமப்புற செலவினங்கள் அதிகரித்து வருகிறது என்றும் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு -7.5 சதவீதமாக இருக்கும் என கூறினார். ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்பதால், வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களிலும் மாற்றம் இருக்காது. ரெப்போ விகிதம் 4 சதவீதமாக இருப்பதால், ஏற்கெனவே வீட்டுக்கடன் வாங்கியவர்கள் செலுத்தும் வட்டி விகிதங்களிலும் மாற்றம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.