பொங்கல் பண்டிகை: சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!

 

பொங்கல் பண்டிகை: சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை புறநகர் ரயில்சேவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகை: சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!

ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்ட போது, சென்னை புறநகர் ரயில் சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. முதலில் அரசு ஊழியர்களுக்கும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. வார நாட்களில் அலுவலகத்திற்கு செல்லும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு 660 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையன்று, 401 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகை: சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!

அரசு விடுமுறை நாட்களிலும் குறைந்த அளவிலான ரயில்களே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நுழையில், பொங்கல் பண்டிகையையொட்டி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதாவது, நாளை பொங்கல் பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக் கிழமையை போன்று 401 ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.