இந்த சுங்கச்சாவடிகளி ல் கட்டணங்களை மாற்றிமையக்க வேண்டும் – மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

 

இந்த சுங்கச்சாவடிகளி ல் கட்டணங்களை மாற்றிமையக்க வேண்டும் – மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

பொதுவாக 60 கிலோ மீட்டர் தூரத்துக்குள் இரண்டு சுங்கச்சாவடி அமைக்கக் கூடாது. இது நெடுஞ்சாலைத் துறை விதிகளின் படி பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள லெம்பாலக்குடி பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடி, சிவகங்கை மாவட்டத்தில் செண்பகப்பேட்டை பகுதியில் உள்ள சுங்கச்சாவடிக்கு 60கி.மீ உள்ளாகவே அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுங்கச்சாவடிகளி ல் கட்டணங்களை மாற்றிமையக்க வேண்டும் – மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

இது குறித்து சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் வசித்து வரும் இளங்கோ என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில் நெடுஞ்சாலைத் துறை விதிக்கு எதிராக செண்பகப்பேட்டை சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதால் அதனை அகற்ற உத்தரவிட வேண்டும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, 60 கி.மீ தூரத்திற்கு உள்ளாக இரண்டு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதால் அந்த இரண்டு சுங்கச்சாவடிகளிலும் சுங்கக்கட்டணத்தை மாற்றிமைக்க வேண்டும் என்றும் 60 நாட்களுக்குள் இதனை முடிக்காவிட்டால் லெம்பாலக்குடி சுங்கச்சாவடி சட்டவிரோதமானதாக கருதப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.