darbar
  • January
    19
    Sunday

Main Area

Main



Elbow Guard டிசைனை மாற்றுங்கள் ! சச்சினுக்கே அட்வைஸ் செய்த ஊழியருக்கு வலை !

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

சென்னையில் ஓட்டல் ஊழியர் ஒருவர் சொன்ன ஐடியாவால் சாதனைகள் பல படைத்ததாக சச்சின் டெண்டுல்கர் தற்போது தெரிவித்துள்ளார். தற்போது அவரை சந்திக்க விரும்புவதாகவும் டிவிட்டர் பதிவிட்டுள்ளார் சச்சின்.

sachin

இது தொடர்பாக டிவிட்டரில் வீடியோ பதிவிட்டுள்ள சச்சின் டெண்டுல்கள் சென்னை டெஸ்ட் தொடரின்போது நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுடன் ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார். 

அதில் சென்னை டெஸ்ட் தொடரின்போது தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியிருந்தேன். அங்கு வந்த ஊழியர் ஒருவர் காபியை என் ரூமுக்கு கொண்டுவந்தார். அப்போது அவர் என்னிடம் "சார் நான் உங்களின் ரசிகன் நீங்கள் எப்போதும் பேட்டிங் பிடிக்கும்போது கையில் உள்ள எல்போ கார்டு சிரமத்தை தருகிறது. அதை  மாற்றி அமைத்தால் விளையாடுவதற்கு எளிதாக இருக்கும்" என்று கூறினார். அந்த விஷயத்தை அதுநாள் வரை யாருமே எனக்கு சொல்லவில்லை.

அவர் ஆலோசனையின்படி எல்போ கார்டை ரீ டிசைன் செய்தேன். அதற்கு பிறகு சாதனைகள் பல படைப்பதற்கு அந்த ஐடியா உறுதுணையாக இருந்தது. எனவே தற்போது அந்த ஊழியரை சந்திக்க ஆசைப்படுகிறேன். அவரை கண்டுபிடிக்க ரசிகர்களாகிய நீங்களும் எனக்கு உதவ வேண்டும்" என கூறியுள்ளார். இது குறித்து தமிழ் மொழியிலும் டுவிட் செய்துள்ளார்.
சென்னையில் நாளை இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில் இந்த பதிவு ரசிகர்களின் கவனம் மேலும் ஈர்த்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.