போனை ஒட்டுக்கேட்கும் ஜெகன்மோகன் அரசு… சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

 

போனை ஒட்டுக்கேட்கும் ஜெகன்மோகன் அரசு… சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

ஆந்திராவில் ஜெகன் மோகன் அரசு எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களின் போனை ஒட்டுக்கேட்பதாக சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அரசு பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்து வரும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் அங்கு வெறுப்பரசியலும் உச்சத்தில் இருப்பது தொடர்பான செய்தி வந்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தைப் போலவே, முந்தைய அரசு கொண்டுவந்த திட்டத்தை நிராகரிப்பதை ஜெகன்மோகன் ரெட்டி மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் புதிய தலைமைச் செயலகம் கைவிடப்பட்டது போல, ஆந்திராவில் புதிய தலைநகரத்தையே டம்மியாக்கினார் ஜெகன் மோகன்.

போனை ஒட்டுக்கேட்கும் ஜெகன்மோகன் அரசு… சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அரசு பதவிக்கு வந்ததில் இருந்து மாநில தேர்தல் ஆணையம், மாநில பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், அரசுக்கு எதிராக இருப்பவர்களின் தொலைபேசி, செல்போன் ஒட்டுக் கேட்கப்படுகிறது.

போனை ஒட்டுக்கேட்கும் ஜெகன்மோகன் அரசு… சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
ஒரு நபரின் போனை ஒட்டுக்கேட்க அரசு விதித்துள்ள வழிகாட்டுதல்களை எல்லாம் மீறி சட்ட விரோதமாக ஆந்திர அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக சட்டவிரோத மென்பொருட்களை எல்லாம் ஜெகன் மோகன் அரசு பயன்படுத்துகிறது. போன் ஒட்டுக் கேட்கும் பணியில் தனியார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தனிநபரின் உரிமையில் தலையிடுவதுடன், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக உள்ளது. ஆந்திராவில் பேச்சுரிமை பறிக்கப்பட்டு, காட்டாட்சி நடக்கிறது. ஜெகன் மோகன் அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.