இன்று ‘ஸ்ட்ராபெர்ரி’ சந்திர கிரகணம் – எப்படி, எந்த நேரத்தில் பார்க்க முடியும்?

 

இன்று ‘ஸ்ட்ராபெர்ரி’ சந்திர கிரகணம் – எப்படி, எந்த நேரத்தில் பார்க்க முடியும்?

இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இன்று (ஜூன் 5-ஆம் தேதி) தோன்ற உள்ளது. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, பசிபிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் அண்டார்டிகாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த சந்திர கிரகண நிகழ்வை மக்களால் காண முடியும்.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இன்றைய சந்திர கிரகணத்தை ‘ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம்’ என்று உலகெங்கிலும் உள்ள வானியலாளர்கள் அழைக்கின்றனர்.

இன்று ‘ஸ்ட்ராபெர்ரி’ சந்திர கிரகணம் – எப்படி, எந்த நேரத்தில் பார்க்க முடியும்?

இன்று (ஜூன் 5) இரவு 11:15 மணிக்கு தொடங்கி நாளை (ஜூன் 6) அதிகாலை 2:34 மணிக்கு இந்த சந்திர கிரகணம் முடிவடையும். இந்த முழு நிகழ்வும் சுமார் 3 மணி நேரம் 19 நிமிடங்கள் நீடிக்கும். இந்த சந்திர கிரகணத்தின் நிகழ்வில் இந்த காட்சியைப் புகைப்படம் பிடிக்க சிறந்த நேரம் அதிகாலை 12:54 மணி என்று கூறப்படுகிறது.

இந்த சந்திர கிரகணத்தை பார்க்க சிறப்பு கண்ணாடிகள் எதுவும் தேவையில்லை. வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என வானியல் அறிஞர்களின் கூறியுள்ளனர். இருப்பினும் தொலைநோக்கிகள் மூலம் பார்த்தால் இன்னும் சிறந்த அனுபவத்தை பெறலாம் என்று வானியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.