கழிவு மண் விளக்குகளை சுத்தம் செய்து வர்ணம் பூசி மறுவிற்பனை.. குழந்தைகளின் கல்விக்கு நிதி திரட்டும் குழு

கழிவு மண் விளக்குகளை சுத்தம் செய்து வர்ணம் பூசி மறுவிற்பனை.. குழந்தைகளின் கல்விக்கு நிதி திரட்டும் குழு

சண்டீகரை சேர்ந்த ஒரு குழு, வேண்டாம் ஒதுக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட மண் விளக்குகளை சுத்தம் மற்றும் வர்ணம் பூசி அவற்றை மறுவிற்பனை செய்கிறது. அதில் கிடைக்கும் வருவாயை ஏழை குழந்தைகளின் கல்விக்காக அந்த குழு செலவிடுகிறது.

தேவையில்லாமல் கழிவுகளை மலைபோல் குவிவதை குறைக்கவும், முடிந்த அளவு பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் சண்டீகரை சேர்ந்த ஒரு குழு செயல்பட்டு வருகிறது. அந்த குழு பயன்படுத்தப்பட்டு வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட மண் விளக்குளை சேகரித்து அவற்றை சுத்தம் செய்து, வர்ணம் பூசி அவற்றை மறுவிற்பனை செய்கிறது. இதனால் மண் விளக்குகள் கழிவுகள் குறைவதோடு, வேலைவாய்ப்பு மற்றும் வருவாயும் கிடைக்கிறது.

கழிவு மண் விளக்குகளை சுத்தம் செய்து வர்ணம் பூசி மறுவிற்பனை.. குழந்தைகளின் கல்விக்கு நிதி திரட்டும் குழு
மறுவிற்பனை தயாரான மண் விளக்குகள்

இந்த மண்விளக்குகள் மறுவிற்பனை வாயிலாக கிடைக்கும் வருவாயை ஏழை குழந்தைகளின் படிப்புக்காக அந்த குழு செலவிடுகிறது. இது தொடர்பாக அந்த குழுவின் உறுப்பினர் ரோஹித் கூறுகையில், 2018ல் பயன்படுத்தப்பட்டு வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட கழிவு மண் விளக்குகளை மறுபயன்பாடு செய்யும் யோசனை செயல்படுத்தினோம். டீச் சே சஹாயக் தக் என்ற திட்டத்தின்கீழ் ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்ய தொடங்கினோம்.

கழிவு மண் விளக்குகளை சுத்தம் செய்து வர்ணம் பூசி மறுவிற்பனை.. குழந்தைகளின் கல்விக்கு நிதி திரட்டும் குழு
ரோஹித்

2018ல் 20 ஆயிரம் விளக்குகளை திரட்டி அவற்றை சுத்தம் செய்து, வர்ணம் பூசி விற்பனை செய்தோம். அதன் மூலம் ரூ.50 ஆயிரம் கிடைத்தது. மக்களுக்கு நிதி உதவி செய்வதற்காக, கோவிட்-19 சமயத்தில் எங்களுடன் தொடர்பில இருந்த இளைஞைர்களை கொண்டு சுயஉதவி குழுக்களை உருவாக்கினோம். விளக்குகளை சுத்தம் செய்வது, வண்ணமயமாக்குவதில் அவர்களை ஈடுபடுத்தினோம். இப்போது வருமானத்தில் 40 சதவீதத்தை பணியாளர்களுக்கும், 60 சதவீதத்தை குழந்தைகளின் கல்வியிலும் முதலீடு செய்யப்படும் என தெரிவித்தார். இந்த குழு 24 மண் விளக்குகளை சுற்றுப்புறச்சூழலுக்கு உகுந்த பைகளில் அடைத்து ரூ.50க்கு விற்பனை செய்கிறது.