• April
    07
    Tuesday

Main Area

Main



தமிழகம், புதுச்சேரியில் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

மழை
மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழத்தில் கடந்த சில நாட்களாகவே கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இரவு நேரத்தில் குளிரும் நிலவி வருகிறது. இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் தாக்கம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். கடலோர கர்நாடகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காணப்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் சில இடங்களில் நேற்று மழை பதிவானது.

rain
வங்கக் கடலில் இருந்து கிழக்கு, வடகிழக்கு, தென் கிழக்கு ஆகிய திசைகளில் இருந்து ஈரப்பதம் மிகுந்த காற்றானது தமிழகம் நோக்கி வீச வாய்ப்புள்ளது. இதனால், இரு தினங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

2018 TopTamilNews. All rights reserved.