வெப்பச்சலனத்தால் கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

 

வெப்பச்சலனத்தால் கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டால் வெப்பம் தணியும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி, கடந்த சில நாட்களாக வெப்பம் ஓரளவு குறைவாக இருக்கிறது. அதே போல தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் தென் மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கோவை, நீலகிரி ,தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனத்தால் கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மதுரை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களிலும் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் இன்று முதல் 23 ஆம் தேதி வரையிலும் தென்மேற்கு , மத்திய மேற்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், அங்கு மணிக்கு 60 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.