அடுத்த 2 மணி நேரத்தில்… 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

அடுத்த 2 மணி நேரத்தில்… 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கிறது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தார்.

அடுத்த 2 மணி நேரத்தில்… 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

17ஆம் தேதியை பொறுத்தவரையில் நீலகிரி, கோவை, தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் புவியரசன் தெரிவித்திருந்தார். அதன் படியே, நேற்று இரவு முதல் விடிய விடிய அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. சென்னையிலும் மழை வெளுத்து வாங்கியது.

இந்த நிலையில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறியுள்ளது.