தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இரவு நேரங்களில் மழை பெய்கிறது. இந்த நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக மேற்கண்ட 5 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வரும் 7,8 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பிற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.