12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

 

12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் வளிமண்டல சுழற்சி ஆக நீடிப்பதால் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும் தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் 16 செ.மீ மழையும் கடம்பூரில் 12 மழையும் பதிவாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. நிவர் புயலை தொடர்ந்து உருவான புரெவி புயலால் கடலூர் மாவட்டம் வெள்ளக் காடாக மாறியுள்ளது. மழை பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளாத சூழலில், மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.