தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் படி, பல மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய வங்க கடல், மன்னார் வளைகுடா, அந்தமான் பகுதிக்கு 5 நாட்கள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அதிகபட்சமாக  தாமரைப்பாக்கத்தில் 10 செ.மீ, பந்தலூரில் 9 செ.மீ, தேவாலா, பாலவிடுதியில் தலா 8 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.