இந்த மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

 

இந்த மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த வாரம் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் பெய்த் கனமழையால், அம்மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்திருந்தது. மேலும் நீலகிரியின் தேவாலா பகுதியில் அதிகபட்சமாக 54 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியதால், அங்கு வசிக்கும் மக்களை காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மழை எல்லாம் தற்போது முடிந்து, மீண்டும் வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது. இரவு நேரங்களில் மட்டும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்த நிலையில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவள்ளூர் மற்றும் சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களிலே மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.