தென்மேற்கு பருவ காற்றால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு!

 

தென்மேற்கு பருவ காற்றால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்த பிறகும் வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. அதே போல அச்சமயம் வந்த ஆம்பன் புயல் கரையை கடக்கும் போது ஈரப்பதம் அனைத்தையும் இழுத்துசென்று விட்டதால் வெப்பம் இன்னும் அதிகமாக இருந்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டால் வெப்பம் தணியும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் படி, கடந்த சில நாட்களாக வெப்பம் ஓரளவு குறைவாக இருக்கிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ காற்றால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு!

தென்மேற்கு பருவ காற்றால் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மத்திய வங்கக் கடல் மற்றும் வட தமிழகம், ஆந்திரா, ஒடிசா ஒட்டிய கடலோர பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் காரைக்காலில் 3 செ.மீ மழையும், நாகையில் 2 செ.மீ மழை பதிவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.