தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

 

தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வந்தது. காணும் பொங்கல் வரை மழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. பொங்கல் பண்டிகை நேரத்தில் பெய்த கனமழையால் வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகளும், நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகளும் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு உறுதியளித்திருக்கிறது. இதனிடையே, லட்சத்தீவு – கன்னியகுமாரி இடையே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை மேலடுக்கு சுழற்சியாக மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருப்பதால் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.