தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதனால் மேட்டூர் அணை, பவானி சாகர் அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதே போல கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்தும் நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

ஒடிசா, மேற்கு வங்க கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதே போல, சென்னை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல், ஒடிசா, வட ஆந்திரா கடலோர பகுதிகளில் வேகமாக காற்று வீச வாய்ப்பு இருப்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.