கோவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
Jun 25, 2020, 12:21 IST1593067898000
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. பகலில் கொளுத்தும் வெயில், இரவில் கொட்டும் மழை என வானிலை மாறி மாறி இருந்து வருகிறது. தென் மேற்கு பருவமழை தொடங்கிய நிலையிலும், கோவை மாவட்டத்தில் அவ்வளவாக மழை பெய்யவில்லை. வழக்கமாக பெய்யும் மழையை விட 10% மழை குறைவாகவே இருக்கிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் மட்டும் அதிகமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், அடுத்த சில நாட்களுக்கு காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் இன்று கோவையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.