இந்த 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்!

 

இந்த 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்!

சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் சேலம், கரூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை கனமழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்!

வெப்பச்சலனத்தால் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் நெல்லை. தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், அதிக பட்சமாக பரமக்குடியில் 13 செ.மீ, வேடசந்தூரில் 11 செ.மீ, காங்கேயத்தில் 10 செ.மீ மழை பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.