இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

 

இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் செண்பகத்தோப்பு, சதுரகிரி மலைப்பகுதிகளில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தெற்கு ஆந்திரா, வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.