Home தமிழகம் இந்த 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்த 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. பகலில் கொளுத்தும் வெயில், இரவில் கொட்டும் மழை என வானிலை மாறி மாறி இருந்து வருகிறது. தென் மேற்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் சில இடங்களில் லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது. ஒரு புறம் கொரோனா அச்சத்தால் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு மழை மகிழ்ச்சியளிக்க, மறு புறம் மழையால் கொரோனா அறிகுறி அதிகமாகக் காணப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் விழுப்புரம், நாகை, கடலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, காரைக்கால், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews