17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

 

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் மேற்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. பகலில் வெயிலும் இரவு நேரத்தில் மழையும் என மாறி மாறி நிலவி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல்லில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி , விருதுநகர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிழும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.