தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று காலை தெரிவித்தது. விழுப்புரம் ,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம் ,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. அதன் படி, சென்னை அருகே பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், புழல் பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது.

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்த நிலையில் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகம், புதுச்சேரியில் உள்ளே 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கோவை, அரியலூர், திருவண்ணாமலை, நீலகிரி, வேலூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரியில் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் 40-50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மத்திய வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.