தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

 

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாவிட்டாலும் இரவு நேரங்களில் மட்டும் சிறிது மழை பெய்து வந்தது. பகலில் வெயிலும், இரவில் மழையும் என மாறி மாறி இருந்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

காற்றின் திசை மாறுபாடு காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கோவை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் வங்க,அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.