இந்த 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

 

இந்த 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாவிட்டாலும் இரவு நேரங்களில் மட்டும் சிறிது மழை பெய்து வந்தது. பகலில் வெயிலும், இரவில் மழையும் என மாறி மாறி இருந்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதி அடைந்தனர். இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதனைத் தொடர்ந்து ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இந்த 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

இந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், கோவை, ஈரோடு, சேலம், தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.