சென்னையில் டாஸ்மாக் திறக்க வாய்ப்பு?.. முன்னேற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

 

சென்னையில் டாஸ்மாக் திறக்க வாய்ப்பு?.. முன்னேற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

பல நாட்களாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடந்த 7 ஆம் தேதி திறக்கப்பட்ட போது, உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றப்படாததால் 8 ஆம் தேதி டாஸ்மாக்கை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 45 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் இரண்டே நாட்களில் மூடப்பட்டது குடிமகன்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் டாஸ்மாக் திறப்பது தொடர்பாக மேல்முறையீடு செய்த நிலையில், டாஸ்மாக்குக்கு எதிரான தடை நீக்கப்பட்டது. அதன் படி சில கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் டாஸ்மாக் திறக்கப்பட்டு விட்டன.

சென்னையில் டாஸ்மாக் திறக்க வாய்ப்பு?.. முன்னேற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

ஆனால் கொரோனா வைரஸ் அதிகமாக இருக்கும் சென்னையில் டாஸ்மாக்கை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், சென்னையில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ஒரு வாரத்தில் கடைகள் திறக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற டாஸ்மாக்குகளை விட குறைவான நேரம் கடைகளை திறக்க முடிவெடுத்துள்ளதாகவும் கடைகள் முன்பு சமூக இடைவெளியை கடைபிடிக்க தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.