‘வெங்காய விளைச்சல் பாதிப்பு’ ஒரு கிலோ ரூ.100க்கு விற்கப்பட வாய்ப்பு!

 

‘வெங்காய விளைச்சல் பாதிப்பு’ ஒரு கிலோ ரூ.100க்கு விற்கப்பட வாய்ப்பு!

மழையின் காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதால் விலை உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டுகளுள் ஒன்று சேலம் மாவட்டத்தில் இருக்கும் தலைவாசல் மார்க்கெட். இதன் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் விவசாயிகள், இந்த மார்க்கெட்டில் தான் விளைபொருட்களை விற்பனை செய்கின்றனர். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 100 டன் அளவுக்கு காய்கறிகள் விற்பனையாவதோடு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

‘வெங்காய விளைச்சல் பாதிப்பு’ ஒரு கிலோ ரூ.100க்கு விற்கப்பட வாய்ப்பு!

அந்த வகையில் ஆந்திராவில் இருந்தும் தலைவாசல் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. தஞ்சாவூர்,சிதம்பரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் வெங்காயமும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வெங்காயங்களும் இந்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் வெங்காயத்தின் அளவு குறைந்திருக்கிறதாம்.

‘வெங்காய விளைச்சல் பாதிப்பு’ ஒரு கிலோ ரூ.100க்கு விற்கப்பட வாய்ப்பு!

இதனால் அப்பகுதிகளில் ஒரு கிலோ வெங்காயம் தற்போது ரூ.45 முதல் 60க்கு விற்கப்படுகிறது. மழைக்கு முன்பு கிலோவுக்கு ரூ.10 முதல் 15 வரை விற்கப்பட்டு வந்த வெங்காயம் தற்போது ரூ.60 வரை உயர்ந்திருக்கிறது. இந்த நிலை நீடித்தால், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.100க்கும் மேல் விற்கப்பட வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.