3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

 

3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் என்றும் இயல்புக்கு மாறாக அதிகமாக வெப்பநிலை பதிவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

இந்த நிலையில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று சேலம், ஈரோடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் சேலம், தருமபுரி, ஈரோடு, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்பநிலை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளது.