இந்த 2 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

 

இந்த 2 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நீலகிரி மற்றும் கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் விடாது கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையிலும் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நீலகிரி மற்றும் கோவையில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த 2 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய 4 மாவட்டங்களிலும் சேலம், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் 3 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும் வரும் 9ம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.