17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; நீலகிரி, கோவையில் மழை வெளுத்து வாங்கும்!

 

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; நீலகிரி, கோவையில் மழை வெளுத்து வாங்கும்!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தென்மேற்கு பருவ காற்று காரணமாக 23ஆம் தேதி(இன்று) தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி கோவையில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார்.

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; நீலகிரி, கோவையில் மழை வெளுத்து வாங்கும்!

மேலும், 24ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் 25, 26 ஆம் தேதி வட கடலோர மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் கூறினார். இந்த நிலையில் மழை நிலவரம் குறித்து இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மற்றும் நீலகிரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; நீலகிரி, கோவையில் மழை வெளுத்து வாங்கும்!

25,26,27ம் தேதிகளில் நீலகிரி, கோவையை தவிர்த்து பிற மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும் இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா, ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.