‘உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி’ தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

 

‘உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி’ தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 25ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி’ தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

இந்த நிலையில், மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், இரண்டு நாட்களுக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.