‘இடி மின்னலுடன்’.. 8 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்!

 

‘இடி மின்னலுடன்’.. 8 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்!

கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் இன்று காலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மீனம்பாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

‘இடி மின்னலுடன்’.. 8 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்!

மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையில், சென்னையில் மழை தொடர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று 8 மாவட்டங்களில் இடி. மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘இடி மின்னலுடன்’.. 8 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்!

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்றும் நீலகிரி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளது. பிற மாவட்டங்களிலும் புதுவையிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் 17-ஆம் தேதி முதல் மழை படிப்படியாக குறையும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.