தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

 

தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தென் மேற்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று சென்னையில் அடுத்த 48 ,மணி நேரத்துக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி கோடம்பாக்கம், வளசரவாக்கம், போரூர், கிண்டி, அசோக் நகர் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. அதே போல காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இந்த நிலையில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு உள்ளதாகவும் நீலகிரி, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் ஜூலை 21, 22 ஆம் தேதிகளில் கேரள கடலோர பகுதிகள், மாலத்தீவு, லட்சதீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.