இந்த 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு!

 

இந்த 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. விருதுநகர், மதுரை, தேனி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு 3 மணி நேரத்துக்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மாதம் 3ம் வாரம், அதாவது 12ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் பேரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாளை மறுநாள் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு!

இந்த நிலையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றிருக்கிறது. இதன் காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளகுறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.