‘அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்’ 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

‘அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்’ 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்’ 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை தொடரும். சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னை புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதிகமாக முத்துப்பேட்டையில் 10 செ.மீ மழையும், செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்’ 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், தற்போது மழை சற்றே தணிந்துள்ளது. கடலூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகள் கனமழையால் வெள்ளக் காடாக காட்சி அளிப்பதால், அப்பகுதி மக்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்கி வருகிறது. இத்தகைய சூழலில், மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.