இந்த மூன்று மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்!

 

இந்த மூன்று மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்!

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாலத்தீவு அருகே நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை , தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மூன்று மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்!

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 18 செ.மீ, மணிமுத்தாறில் 16 செ.மீ மழை பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. வரும் 19ம் தேதி முதல் தென் தமிழகத்தில் மழை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.