3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

 

3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடக்கு வங்கக் கடல் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை, திருவள்ளூர் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மன்னார் வளைகுடா, மத்திய வங்கக் கடல், லட்சத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் 15ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.