வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி; கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி; கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும் வானிலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தொடரும் என்றும் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் கோவா ம. பி உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி; கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

இந்த நிலையில், வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஒடிசா- மேற்கு வங்கம் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளதாகவும் கர்நாடகா, கேரளா, தமிழகம், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல், மன்னர் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.