கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

 

கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பியதோடு, அணைகளுக்கு நீர் வரத்தும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தொடர் கனமழையால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீலகிரிக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்ட நிலையில், கோவை மற்றும் தேனிக்கும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது. அதனால் அந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்த நிலையில் கோவை மற்றும் நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அரியலூர், பெரம்பலூர், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாம்பனில் 12 செ.மீ மழையும், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 10 செ.மீ மழையும் பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.