தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

 

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னையில் லேசான மழை பெய்யும் என்றும் நேற்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி சென்னையின் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. அதுமட்டுமில்லாமல், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்த நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தருமபுரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.