‘நீலகிரியில் மிக கனமழை பெய்யக்கூடும்’ 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

‘நீலகிரியில் மிக கனமழை பெய்யக்கூடும்’ 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பல நீர்நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து பாசனத்துக்காக அதிக அளவில் நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘நீலகிரியில் மிக கனமழை பெய்யக்கூடும்’ 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.