தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

 

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் புதுச்சேரி, காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கடலூர், நீலகிரி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அதிகபட்சமாக பொன்னமராவதி, மானாமதுரை, இலுப்பூர், மணப்பாறையில் 7 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் தென்மேற்கு பருவமழை ராஜஸ்தான், பஞ்சாப் மாநில பகுதியில் இருந்து விலகத் தொடங்கியிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.